இந்திய தேசிய கொடியால் பைக்கை துடைத்த நபர் - அதிரடியாக கைது செய்த போலீசார்...!
இந்திய தேசிய கொடியால் ஒருவர் தன்னுடைய பைக்கை சுத்தம் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையானதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்திய தேசியக் கொடியால் தனது ஸ்கூட்டரை சுத்தம் செய்துள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், அந்த நபருக்கு கண்டனங்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனையடுத்து, வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையானதால் போலீசார் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் பிரிவு 2ன் கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தேசிய கொடி மற்றும் அவருடைய ஸ்கூட்டரை பறிமுதல் செய்துள்ளனர்.
Man in Delhi caught on camera cleaning his scooter with National Flag #IndianFlag #Delhi #ViralVideo #Tiranga pic.twitter.com/xbpjaKoY7A
— AH Siddiqui (@anwar0262) September 7, 2022