தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக மாறிய காங்கிரஸ் - தொண்டர்கள் உற்சாகம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிமுகவை தொண்டர்ந்து மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உளளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாகக் கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த இருகட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.

பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியான திமுக வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 153 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு முடிவு தெரிந்த 8 இடங்களையும் திமுகவே கைப்பற்றியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 6 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும்,30 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கூட்டணி முக்கிய பங்காற்றி வரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதனை அக்கட்சியினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.இதை தொடர்ந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் காங்கிரஸ் கட்சி பேசும் பொருளாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்