காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது...!
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பு
கடந்த 2019-ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதனால், இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
இதனையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு அதிருப்தி தலைவர்கள் 23 பேர் அடங்கிய ஜி-23 குழு, சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் ஆகும். இந்த வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 1-ம் தேதி, வேட்புமனு பரிசீலனை நடத்தப்பட உள்ளது.
மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசிநாள். அன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
அக்டோபர் 17-ம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, அக்டோபர் 19-ம் தேதி, ஓட்டுகள் எண்ணப்படும். 22 ஆண்டுகளுக்கு பிறகு, காந்தி குடும்பத்தினர் விலகியுள்ளதால், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.