Monday, May 12, 2025

காங்கிரஸ் கூட்டத்தில் அடிதடி - எம்.பி கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் தொண்டர்கள் மோதல்

Indian National Congress Karti Chidambaram
By Thahir 4 years ago
Report

உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் எம்பி கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்னிலையில்,சிவகங்கை மாவட்டக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன்படி,நடைபெற்ற இந்த கூட்டத்தில்,முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத முன்னாள் நகர்மன்ற தலைவர் வேலுச்சாமி தரப்பினரும்,எம்பி கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து,இந்த வாக்குவாதம் மோதலாக மாறி எம்பி கார்த்தி சிதம்பரம் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.அவர்களுக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.