காங்கிரசுக்கு திமுக ஆக்ஸிஜன் சப்ளை செய்கிறது - அண்ணாமலை காட்டமான பதிவு

DMK BJP MK Stalin Congress Rahul Gandhi K Annamalai
By Thahir Feb 03, 2022 08:23 AM GMT
Report

உங்கள் வாழ்நாளில் ஒரு போதும் தமிழகத்தை ஆள முடியாது என மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியிருந்தார்.

தற்போது அவரின் பேச்ச சமூக வளைதலங்களில் வேகமாக பகிரப்பட்டு டிரெண்டிங் ஆகி வருகிறது இந்நிலையில் அவரின் பேச்சுக்கு பாஜகவை சேர்ந்த குஷ்பு கிண்டலடித்துயிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் நீங்கள் எப்போது கற்றுக்கொள்வீர்கள் தயவு செய்து உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் ராகுல் ஜி.புதுச்சேரியில் பாஜக ஆட்சி தான் தமிழ் மக்கள் எங்களை நம்பியுள்ளனர் என்றுதான் அர்த்தம்.

ப்ளீஸ் வளருங்கள். அதிக நேரம் பேசும் முன்பாக யோசியுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு முறையும் தடுமாறுவதைப் பார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க.வின் ஆக்சிஜன் சப்ளை மூலம் நீங்கள் இப்போது ஐசியுவில் இருக்கிறீர்கள் என்றும் எங்கள் மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி,

நாங்கள் இப்போது புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறோம் அது ஒரு மைல் கல் மற்றும் அடுத்த சந்திப்பு தமிழ்நாடு இருக்கும் என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.