காபுலில் துப்பாக்கி முனையில் இந்தியர் கடத்தல்? - வெளியான தகவலால் அதிர்ச்சி

Afghanistan talibanfighters
By Petchi Avudaiappan Sep 14, 2021 10:32 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் உயிர்வாழ பயந்து நாட்டை விட்டே வெளியேறி  வருகின்றனர். இதனிடையே ஆப்கானில் வசித்து வரும் இந்திய பூர்வீகம் கொண்ட இந்து ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காபுலின் 11வது போலீஸ் மாவட்டத்தில் மருந்து கடை நடத்தி வரும் பன்சிரி லால் அரெண்டே என்ற ஆப்கன் வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர் இவர் நேற்றிரவு 8 மணியளவில் தனது கடையில் இருந்து   ஊழியர்களுடன் வழக்கமான பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த சிலர் பன்சிரி லால் மற்றும் அவரின் கடை ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்

கடத்தப்பட்ட பன்சிரி லாலின் குடும்பத்தினர் டெல்லி அருகேயுள்ள பரீதாபாத் பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் பன்சிரி லால் கடத்தப்பட்டது குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை தேடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பன்சிரி லால் கடத்தப்பட்ட நிலையில் அவருடைய கடை ஊழியர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும், அவர்களை ஈவு இரக்கமின்றி கடத்தல்காரர்கள் அடித்து தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. 

இதனிடையே இந்தியர் கடத்தப்பட்டது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியர் கடத்தபட்டது குறித்து ஆப்கனில் உள்ள சீக்கிய இந்து அமைப்பினர் தெரிவித்ததாக இந்திய உலக போரம் அமைப்பின் தலைவர் புனீத் சிங் சந்தோக் இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் கூறியிருப்பதுடன், உடனடியாக தில் தலையிட்டு கடத்தப்பட்ட இந்தியரை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.