பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை...பதறிப்போன பாக் ராணுவம்..!

IndianMissile ShotDownInPakistan ShockingPakistan
By Thahir Mar 11, 2022 07:06 PM GMT
Report

இந்தியாவின் ஏவுகணை தங்கள் நாட்டில் பாய்ந்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவிலிருந்து பரிசோதனைக்காக ஏவப்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணை ஒன்று கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த விவகாரம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

கடந்த 9 ஆம் தெதி அரியானா மாநிலம் சிர்சா பகுதியில் இருந்த ஏவப்பட்ட அதிவேக ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் மியா சானு என்ற இடத்தில் விழுந்தது.

ஏவுகணை விழுந்ததில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை,தனியார் சொத்துக்கள் மற்றும் சேதமடைந்துள்ளதாக பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

மார்ச் 9-ம் தேதியன்று வழக்கமான பராபமரிப்பின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை ஒன்று பாகிஸ்தானில் தரையிறங்கிவிட்டது.

இந்திய அரசு தீவிரமாக கொண்டு உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளது.