இந்தியாவுக்கு பதிலடி கொடுத்திருக்க முடியும் - பாகிஸ்தான் பிரதமர்..!

ImranKhan IndianMissileIncident PrimeMinisterofPakistan IndiaVsPakistan
By Thahir Mar 14, 2022 12:22 AM GMT
Report

பாகிஸ்தானில்,இந்தியாவைச் சேர்ந்த ஏவுகணை விழுந்ததற்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்திருக்க முடியும் என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த 9-ந் தேதி இந்தியாவைச் சேர்ந்த ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் பகுதியில் போய் விழுந்தது. பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக பாய்ந்து சென்றதாக இந்திய ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்தது.

இச்சம்வம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியா அளித்த விளக்கம் திருப்பதி அளிக்கவில்லை எனவே கூட்டு விசாரணை நடத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இந்தியாவை வலியுறுத்தியது.

இந்தியாவுக்கு பதிலடி கொடுத்திருக்க முடியும் - பாகிஸ்தான் பிரதமர்..! | Indian Missile Incident Pm Imran Khan Say

இதனிடையே பஞ்சாப் மாநிலம் கபிசாபாத் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஏவுகணை விழுந்த சம்பவம் பற்றி பேசினார்.

அப்போது அவர் இந்திய ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்தவுடன்,இந்தியாவுக்கு பதிலடி கொடுத்திருக்க முடியும். ஆனால் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்தோம்,நாட்டையும் ராணுவத்தையும் நாம் வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.