2021ம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்கள் இவர்கள்தான்! - வெளியானது பட்டியல்

india ambani millionaires forbes
By Jon Apr 07, 2021 04:49 PM GMT
Report

2021ம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியல் டாப் 5 கோடீஸ்வரர்கள் : 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானசொத்துகளோடு ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார். HCL நிறுவனர் ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாயுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளார். அவன்யூ சூப்பர்மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 4ம் இடம் வகிக்கிறார்.

கோடக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோடக் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 5ம் இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து லட்சுமி மிட்டல்,குமார் பிர்லா, சைரஸ் பூனவல்லா,திலீப் ஷாங்க்வி,சுனில் மிட்டல் அண்ட் குடும்பம் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். கடந்த ஆண்டு போர்ப்ஸ் தகவலின் படி 12 வது இடத்தில் இருந்த பார்மா அதிபர் திலீப் ஷாங்க்வி இந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள் மீண்டும் வந்தார்.