நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் : சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்
By Irumporai
சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவம், ஓமியோபதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சித்த மருத்துவர் ஷர்மிகா
சித்த மருத்துவர் ஷர்மிகா உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி, கர்ப்பம் தரிப்பது குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் குப்புறப் படுத்தா மார்பகப் புற்றுநோய் வரும், நுங்கு சாப்பிட்டால் பெண்களின் மார்பகம் பெரிதாகும்,குப்புறப் படுத்தா பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்வரும் என கூறியிருந்தார்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அதில் சில சர்ச்சையான விளக்கங்களை கூறியதாக அவர் மீது புகார் எழுந்தது, ஆகவே சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது