ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்திய நீதிபதி - பரபரப்புக்குள்ளான சர்வதேச நீதிமன்றம்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்த விசாரணையின் போது சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய நீதிபதி வாக்களித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதனிடையே ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிடக்கோரியும், அந்நாட்டு படைகளை வெளியேற்றக் கோரியும் உக்ரைன் மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய, எந்தவொரு நடவடிக்கையிலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.
இதனை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வரவேற்றுள்ள நிலையில், தீர்ப்பை நிர்ணயிக்கக் கூடிய ஜூரிக்கள் எனப்படும் 15 நீதிபதிகளில் 13 பேரின் ஆதரவுடன் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவின் செயல்களைக் கண்டித்து வாக்களித்தார்.
இதற்கு முன்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டங்களில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்களில் வாக்களிப்பதை இந்தியா தவிர்த்த நிலையில் ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றே இன்றளவும் தெரிவித்து வருகிறது. உக்ரைன், ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம்.
ஆனால் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்ட இந்த உத்தரவிற்கு ரஷ்யா உடனடியாக இணங்காமல் புறக்கணித்தால் சர்வதேச அரங்கில் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என்று செலன்ஸ்கி கூறியுள்ளார்.தெரிவித்துள்ளார்.