இனி passport விண்ணப்பிக்க இந்த சான்றிதழ் கட்டாயம் - வெளியான புதிய விதி!
மத்திய அரசு பாஸ்போர்ட்டுகளுக்கு புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
பாஸ்போர்ட்
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பயன்படுத்தப்படும் ஆவணம் பாஸ்போர்ட். பாஸ்போர்ட் விண்ணப்பிக்கப் பெயர், பால், பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய்-தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.முன்னதாக, பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்குப் பிறந்த தேதியை நிரூபிக்கப் பல ஆவணங்கள் வழங்கப்பட்டு வந்தன.
அதாவது பள்ளிச் சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு பாஸ்போர்ட்டுகளின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
புதிய விதியின்படி, அக்டோபர் 1, 2023-க்குப் பிறகு பிறந்தவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே செல்லுபடியாகும் சான்றாகக் கருதப்படும். மேலும் பிறப்புச் சான்றிதழின் தேதியைப் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அலுவலகம், நகராட்சி அல்லது பிறப்பு ,இறப்பு பதிவுச் சட்டம்,1969 இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த அமைப்பாலும் வழங்கப்பட வேண்டும்.
புதிய விதி
ஒருவர் 2023 அக்டோபர் 1-க்கு முன்பு பிறந்திருந்தால், அவர்கள், பள்ளிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற மாற்று ஆவணங்களைப் பிறப்புத் தேதிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படலாம்.
இருப்பினும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, பிறப்புச் சான்றிதழ் தவிர வேறு எந்த ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.