விவாகரத்திற்கு பிறகு இமான் எடுத்த அதிரடி முடிவு - மறுமணம் எப்போது?
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான் இவர் அண்மையில் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
இவருக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் விரைவில் மறுமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இது குறித்து பேசிய டி.இமான் விவாகரத்து என்றாலே ஆண் சமூகத்தின் மீது தான் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
தவறுகள் யார் மீது வேண்டுமானாலும் இருக்கலாம்.அதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.
தனிப்பட்ட முறையில் விவாகரத்து கூடாது என்பதுதான் எனது எண்ணம். என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருப்பேன்.
நான் மறுமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் விரும்புகின்றனர். அடுத்து நான் திருமணம் செய்தாலும் குடும்பத்தினர் நிச்சயித்த திருமணமாகத்தான் அது இருக்கும்.
திருமணம் செய்து கொள்ளும் பெண் எனது குழந்தைகளுக்கும் தாயாக இருக்க வேண்டும், விதவை அல்லது விவாகரத்து செய்த பெண்ணாகவும்,
குழந்தை இருக்கும் பெண்ணாகவும் பாருங்கள் என்று குடும்பத்தினரிடம் கூறியுள்ளேன். குழந்தை இருக்கும் பெண்தான் எனது குழந்தைகளையும் தனது குழந்தைபோல் பார்த்துக் கொள்வார்'' என்றார்.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan