Wow... ஆழ்கடலில் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து அழகுப் பார்த்த இந்திய ரசிகர்கள் - வைரலாகும் மாஸ் வீடியோ....!
ஆழ்கடலில் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து அழகுப் பார்த்த இந்திய ரசிகர்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வந்தது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணி நுழைந்துள்ளது.
இறுதிப்போட்டியில் பிரான்ஸுடன் மோத உள்ள அர்ஜென்டினா
கடந்த 13ம் தேதி நள்ளிரவு நடந்த முதலாவது அரைஇறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த போட்டியில் பரப்பான ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.
இப்போட்டியின் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி மாபெரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக நுழைந்தது.
இதனையடுத்து, உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியின் இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் நாளை மறுதினம் கோதாவில் நேருக்கு நேர் மோத உள்ளன.
மெஸ்ஸிக்கு ஆழ்கடலில் கட்-அவுட் வைத்த இந்திய ரசிகர்கள்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவின் தலைநகரம் கவரத்தியில் இந்திய ரசிகர்கள் ஆழ்கடலுக்குள் சென்று லயோனல் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து அழகுப் பார்த்து, உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்கள் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Argentina Fans, Kavaratti island, Lakshadweep, India ❤️❤️❤️ #VamosArgentina @TeamMessi pic.twitter.com/9hysy7ILgf
— Comrade From Kerala ? (@ComradeMallu) December 16, 2022