Sunday, Jul 6, 2025

”என்னய்யா இது” ... இந்தியா - நியூசிலாந்து போட்டியில் ரசிகர் செய்த காரியம் - வீடியோவைப் பாருங்க...

INDvNZ kanpurtest
By Petchi Avudaiappan 4 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் காண வந்த  ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். 

கான்பூரில் இன்று தொடங்கிய இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

இதன்படி களம் கண்ட இந்திய அணி வீரர்களில் சுப்மன் கில் (52), ஸ்ரேயாஸ் அய்யர்(75), ஜடேஜா(50) ரன்கள் விளாச முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்துள்ளது. 

இந்த நிலையில் போட்டியை காண வந்த ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளார். அந்த வேறு யாருடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். சும்மா பேசி கொண்டிருந்தால் பரவாயில்லையே,வாயில் பான்பராக்கை போட்டுக் கொண்டு பேசியது தான் இதன் ஹைலைட்டே, இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பட்டது. 

வட இந்தியாவில் பீடா, பான்பராக், புகையிலை போன்ற வஸ்துக்கள் மிகவும் பிரபலம். இதனை வாயில் போட்டு மெண்டு, தற்போது உலகம் முழுவதும் அந்த ரசிகர் பிரபலமாகிவிட்டார்.

You May Like This