மியா கலிஃபாவின் புது வீடியோ - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Mia khalifa Mia khalifa new video Indian fan tattoo
By Petchi Avudaiappan Sep 08, 2021 01:33 AM GMT
Report

இந்திய ரசிகர் ஒருவர் செய்த செயலால் பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிஃபா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உலகளவில் ஆபாச படங்களில் நடித்து அனைத்து வயது மக்களிடமும் பிரபலமானவர் நடிகை மியா கஃலிபா. ஆனால் நான் அப்படிப்பட்ட நடிகையாக மாறியது தனக்கு பிடிக்காத ஒன்று என தெரிவித்த மியா கருணை உள்ளம் கொண்டவர்.

தன்னுடைய சொந்த நாடான லெபனானின் பெய்ரூட்டில் கடந்தாண்டு மாபெரும் வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் விதமாக தனது அடையாளமாக விளங்கும் மூக்குக் கண்ணாடியை இந்திய மதிப்பில் ரூ.73 லட்சத்துக்கு ஏலம் விட்டு அந்த தொகையை கொண்டு உதவினார்.

இந்நிலையில் அவருக்காக இந்திய ரசிகர் ஒருவர் வித்தியாசமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் tattoo_artist_01 என்ற கணக்கை கொண்டிருக்கும் மியா கலிஃபாவின் இந்திய ரசிகர் அவரின் முகத்தை தனது காலில் டாட்டூ வரைந்துள்ளார்.

அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் இதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு மியா கலிஃபாவை டேக் செய்திருந்தார்.

இந்த வீடியோவானது மியா கலிஃபாவின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இது மிகவும் கொடூரமானது என கூறியதோடு மட்டுமல்லாமல் இப்படியான செய்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் அன்பு தேவை தான், அதற்காக இப்படியான காரியங்களில் ஈடுபடும் போது அவர்களை கண்டிக்கும் அந்த அன்பு தான் நிச்சயம் என்றென்றைக்கும் மறக்காமல் இருக்கும் என்பதை மியா கலிஃபா நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.