காவல் நிலையத்தில் திடீரென மயங்கி கீழே விழுந்த ராக்கி சாவந்த் - வைரலாகும் வீடியோ...!

Bollywood Viral Photos
By Nandhini Feb 08, 2023 07:12 AM GMT
Report

நேற்று காவல் நிலையத்தில் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் திடீரென மயங்கி கீழே விழுந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ராக்கி சாவந்த் திருமணம்

பிரபல கவர்ச்சி நடிகையாக பாலிவுட்டில் வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவரும், ஆதில் என்பவரும் கடந்த 2022ம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் அவர்களின் திருமணம் ஊடகங்களால் அறிவிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ராக்கி சாவந்த்தின் தாயார் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து, தன் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ராக்கி சாவந்த்.

ராக்கி சாவந்தின் கணவன் கைது

நேற்று கணவர் ஆதில் மீது ராக்கி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், தன்னை அடிப்பதற்காக அடில் தன் வீட்டிற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். 2 முறை ராக்கி ஆதில் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

என்னிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை அவரது கணவர் ஆதில் எடுத்துள்ளார். ஆதிலுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இப்போது, ​​நான் அடிலுடன் எந்த வித சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை.

பல பெண்களுடன் உறங்கும் ஒரு மனிதனுடன் என்னால் வாழ முடியாது. ராக்கி ஆடிலிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறேன் என்றார். தற்போது ராக்கி சாவந்த்தின் கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

indian-dancer-rakhi-sawant-dizzy

திடீனெ மயக்கம் அடைந்த ராக்கி சாவந்த்

இந்நிலையில், நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த ராக்கி திடீரென மயக்கம் அடைந்து சுருண்டு கீழே விழுந்தார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் அவர் முகத்தியல் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்தனர். இதனையடுத்து அவருடன் வந்தவர்கள் ராக்கி சாவந்த்தை அழைத்துச் சென்றனர்.

தற்போது ராக்கி சாவந்த் மயக்கம் அடைந்து கீழே விழுந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் ராக்கி சாவந்த் வாழ்க்கையில் என்னதான் நடக்கிறது என்று கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர்.