வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி ; கருப்பு நிற பேட்ஜ் அணிந்து விளையாடி வரும் இந்திய அணி

homage indian cricket team lata mangeshkar ind vs wi ahmadabad black badge
By Swetha Subash Feb 06, 2022 11:00 AM GMT
Report

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியை இன்று அஹமதாபாதில் தொடங்கியது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த போட்டியின் மூலம் ரோகித் ஷர்மா கேப்டனாக தன் முதல் போட்டியை துவங்குகிறார்.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களின் கைகளில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்திய திரையுலகின் பிரபல முன்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று காலமானார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி ; கருப்பு நிற பேட்ஜ் அணிந்து விளையாடி வரும் இந்திய அணி | Indian Cricketers Wearing Black Badge In Hands

அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி வீரர்கள் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது கைகளில் கருப்பு நிற பேட்ஜ் அணிந்துள்ளனர்.