அஸ்வின் ஓரங்கட்டப்படுகிறார்... - ரோஹித் சர்மாவை விளாசிய சுனில் கவாஸ்கர்....!
ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினை வேண்டுமென்றே ரோகித் சர்மா ஒதுக்கியதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சுருண்டு விழுந்த இந்தியா - All Out
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் நேற்று முதல் இந்தூரில் தொடங்கி நடந்து வருகிறது. இப்போட்டியின் இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்து ஆல் ஆவுட்டானது.
ஆஸ்திரேலியா 197 ரன்களுக்கு - All Out
இதனையடுத்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 47 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 76.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து இன்று 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி தனது 2ம் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
விளாசிய சுனில் கவாஸ்கர்
ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினை வேண்டுமென்றே ரோகித் சர்மா ஒதுக்கியதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில், தொடங்கியபோது, அஸ்வின் மீது இந்திய அணி நம்பிக்கையே வைக்கவில்லை. முகமது சிராஜ்க்கும், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை மட்டுமே மாறி மாறி விளையாட வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ரோகித்.
இறுதியில் 15 ஓவர்கள் கழித்து தான் அஸ்வின் களத்தில் இறங்கினார். பந்தை கையில் வாங்கிய அஸ்வின் உடனே அதிரடியாக விளையாடினார். உடனே, ஹேண்ட்ஸ்கோம் வீழ்த்தினார். இதன் பின்னர், ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்குள் 10 விக்கெட்களையும் இழந்தது. எதற்காக அஸ்வினை இவ்வளவு நேரம் கழித்து விளையாட வைத்தார்கள் என்பது புரியவில்லை.
இறுதியில் அஸ்வின் தானே ஹேண்ட்ஸ்கோம்பின் விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வின் தான் திருப்புமுனையாக இருந்தார். அஸ்வின் ஒரு டாப் கிளாஸ் வீரர். 450 விக்கெட்களை எடுத்தவருக்கு இது கூட தெரியாமல் போய்விடுமா?. முன்கூட்டியே பந்தை கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அஸ்வினுக்கு மட்டும் இது தொடர்ந்து நடக்கிறது என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியோடு பேசியுள்ளார்.
தற்போது இது தொடர்பான செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அஸ்வினை முன்கூட்டியே இறங்கியிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.