எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும் : ஓய்வை அறிவித்த உத்தப்பா

Indian Cricket Team
By Irumporai Sep 16, 2022 07:19 AM GMT
Report

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அறிவித்துள்ளார்.

ராபின் உத்தப்பா

  கடந்த 2007-ல் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். கடந்த 2021 மற்றும் 2022 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.

எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும் : ஓய்வை அறிவித்த உத்தப்பா | Indian Cricketer Robin Uthappa Retires

இந்த நிலையில் தனது ஒய்வு குறித்து உத்தப்பா தனது ட்விட்டர் பதிவில் :

கெளரவமாக கருதுகிறேன்

எனது நாட்டுக்காகவும், எனது மாநிலத்திற்காகவும் கிரிக்கெட் விளையாடியதை கவுரவமாக கருதுகிறேன்.

எப்படியும், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்தாக வேண்டும். நன்றி கொண்ட இதயத்துடன் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவருக்கும் நன்றி” என உத்தப்பா இரண்டு பக்க கடிதத்தில் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2007 டி20 உலகக் கோப்பையில் ஃபவுல் அவுட் முறையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றியின் வீடியோவை பகிர்ந்து உத்தப்பாவுக்கு விடை கொடுத்துள்ளது. அந்த போட்டியில் சரியாக பந்து வீசி ஸ்டம்புகளை அவர் தகர்த்திருப்பார்.