சாப்பாடு சரியாக அளிக்கவில்லை - இந்திய வீரர்கள் அதிருப்தி!

Sumathi
in கிரிக்கெட்Report this article
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய அணி
டி20 உலகக் கோப்பை தொடரின், பாகிஸ்தானுடன் போட்டி முடிந்த மறுநாளே சிட்னிக்கு பறந்தது இந்திய அணி. அங்கு இந்திய அணியினர் பயிற்சி கொண்டு வந்த நிலையில் அவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீரர்களுக்கு பயிற்சி முடிந்த பின்னர் சாண்ட்விச், பழங்கள், ப்ரை செய்யப்பட்ட உருண்டைகள் மட்டுமே மதிய உணவாக கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் கூட சூடாக இல்லாமல் குளிர்ச்சியாகவே இருந்ததாகவும் ஐசிசிக்கு இந்திய அணி நிர்வாகம் புகார் தெரிவித்தாக ஐசிசி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மெனுவினால் அதிருப்தி
இந்திய வீரர்கள், சிட்னியில் தங்களுக்கு அளிக்கப்பட்ட மெனுவினால் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. பல வீரர்கள் உணவு சாப்பிடாமலேயே ஹோட்டலுக்கு திரும்பிவிட்டாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
சிட்னியில் இருக்கும் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்ட அறையிலிருந்து 40 கிமீ மேல் உள்ள பிளாக்டவுன் என்ற இடத்தில் உள்ள மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆட்டம் நடைபெறும் முந்தைய நாளான இன்று இந்திய வீரர்கள் அவ்வளவு தூரம் சென்று பயிற்சி மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.