உலக கோப்பை போட்டி; இந்திய அணியில் இந்த 3 மாற்று வீரர்களின் பெயர்கள் சேர்ப்பு - குஷியில் ரசிகர்கள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் 3 மாற்று வீரர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
ஆஸ்திரேலியா பயணம்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இன்றோடு பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி நிறைவடையப்போகிறது.
பும்ரா விலகல்
பிசிசிஐ தன் டுவிட்டர் பக்கத்தில், பும்ராவிற்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
மாற்று வீரர்களின் பெயர்கள் சேர்ப்பு
இந்திய அணியில் மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், முகமது ஷமி, பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தீபக் சாஹருக்கு கணுக்கால் காயம் குணமடைந்து விட்டாலும், முதுகுவலி பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் அவரால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாற்று வீரர்கள் பட்டியலில் புதிதாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
மற்ற மாற்று வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர், ரவி பிஷ்னோய் ஆகியோர் தற்போது ஆஸ்திரேலியா செல்லமாட்டார்கள் என்றும், தேவைப்பட்டால் அழைக்கப்படுவார்கள் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கிறது.