டி20 கிரிக்கெட் தொடர் - இந்திய வீரர் சஞ்சு சாம்சன் விலகல் - ரசிகர்கள் ஷாக்...!
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடலிருந்து இந்திய வீரர் சஞ்சு சாம்சன் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதல் டி20 கிரிக்கெட் தொடர் -
இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
இந்திய வீரர் சஞ்சு சாம்சன் விலகல் -
இந்நிலையில், போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் விலகி இருக்கிறார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NEWS - Sanju Samson ruled out of the remainder of T20I series.
— BCCI (@BCCI) January 4, 2023
The All-India Senior Selection Committee has named Jitesh Sharma as replacement for Sanju Samson.
More details here - https://t.co/0PMIjvONn6 #INDvSL @mastercardindia