T20 உலகக் கோப்பை : பாகிஸ்தானுடன் மோத மெல்போர்ன் வந்தடைந்தது இந்திய அணி... - வைரலாகும் வீடியோ
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள T20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி நேருக்கு நேர் மோத உள்ளது. இதற்காக இந்திய அணி மெல்போர்ன்னுக்கு வந்தடைந்துள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பயிற்சி ஆட்டத்தில் முன்னேறிய இந்தியா
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெர்த்தில் 2 பயிற்சி ஆட்டங்களிலும், பிரிஸ்பேனில் 2 பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடியது.
இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஆட்டம் மழையால் நின்று போனது.
பாகிஸ்தானிடம் மோத உள்ள இந்திய அணி
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானிடம் நேருக்கு நேர் மோத உள்ளன. இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி பிரிஸ்பேனிலிருந்து மெல்போர்னுக்கு பயணம் செய்துள்ளது.
தற்போது இந்திய அணி பயணம் செய்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தை பார்ப்பதற்கு இரு நாட்டு ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், போட்டி நடைபெறும் நாளில் மழைக்கு 80 சதவீத வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது.
Perth ✔️
— BCCI (@BCCI) October 20, 2022
Brisbane ✔️
Preparations ✔️
We are now in Melbourne for our first game! #TeamIndia #T20WorldCup pic.twitter.com/SRhKYEnCdn