அடடா..அடடா..அற்புதம்...பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி..!
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
ஒரு நாள் போட்டி
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி குவின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரண் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது.
இதன்பின் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய அணி தொடர்ச்சியாக 12 வது முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியுள்ளது.
இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் ஒரே இணிக்கு எதிராக தொடர்ச்சியாக பல தொடர்களை கைப்பற்றிய அணிகள் வரிசையில் பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.