ரிஷப் பண்ட் பூரண நலம் பெற வேண்டும் மனமுறுகி இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கோவிலில் பிரார்த்தனை

Rishabh Pant Indian Cricket Team Suryakumar Yadav
By Thahir Jan 23, 2023 07:03 AM GMT
Report

 ரிஷப் பண்ட் பூரண நலம் பெற வேண்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள மகாகாலேஸ்வர் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர்.

இந்திய அணி வீரர்கள் பிரார்த்தனை 

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள நிலையில் அங்கு இந்திய அணி வீரர்கள் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை உஜ்ஜயினின் புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் கோயிலுக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் பூரண குணமடைய வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Indian cricket team players pray at the temple

இந்த பிரார்த்தனையின் போது சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வழிபாடு நடத்தினர்.

விரைவில் பூரண குணமடைய வழிபாடு

பிரார்த்தனை குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் பேசுகையில், தங்கள் அணி வீரர் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய மகாகலை பிரார்த்திக்கிறோம்.

ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்தோம். அவரது மறுபிரவேசம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை நாங்கள் ஏற்கனவே வென்றுள்ளோம். அவர்களுக்கு எதிரான இறுதி போட்டியை எதிர்நோக்குகிறோம் என்று சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.