என்னது நீங்களா ? தயவு செஞ்சு நடய கட்டுங்க : இந்திய அணியை கலாய்த்த மைக்கெல் வான் !

worldcup t20 indianvsnz
By Irumporai Oct 31, 2021 05:25 PM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், இந்திய அணியும் மோதி வருகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த போட்டியில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் நெட்டிசன்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில்  குறிப்பாக முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கெல் வான், இந்திய அணி இந்த டி.20 உலகக்கோப்பையை தொடரை வெல்வதற்கு அல்ல, விளையாடுவதற்கு கூட தகுதியற்ற அணி என்ற வகையில் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.