இந்தியாவின் தோல்விக்கு காரணம் ராகுல் மட்டுமே கிடையது... - சுனில் கவாஸ்கர் கருத்து..!

Sunil Gavaskar KL Rahul Indian Cricket Team
By Nandhini Dec 05, 2022 11:30 AM GMT
Report

இந்தியாவின் தோல்விக்கு காரணம் ராகுல் மட்டுமே கிடையது என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம் -

இந்தியா - வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்துப் போட்டியின் பேட்டிங் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது.

இப்போட்டியின் முடிவில், 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து, இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபாரமாக வெற்றி பெற்றது.

கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச் -

இப்போட்டியில், கே.எல். ராகுல் தவறவிட்ட கேட்ச்தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மிஹிடி ஹசன் மிர்சா அதிரடியாக ஆடினார். அவர் ரன் அடிக்க, அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு குறைந்து கொண்டே வந்தது. ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார்.

அது கேட்ச் நோக்கி சென்றது. அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் வேகமாக ஓடினார். அவர் அந்த பந்தை கேட்சி பிடிக்க முயன்றபோது, பந்து அவரது கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.

கேட்சி தவறவிட்டதை தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் மிர்சா வங்காளதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச்சை இந்திய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

indian-cricket-team-kl-rahul-sunil-gavaskar

சுனில் கவாஸ்கர் கருத்து

இந்நிலையில், இந்திய அணியின் இந்த தோல்விக்கு ராகுல் மட்டுமே காரணம் கிடையாது என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

உண்மையாக அது தான் தோல்விக்கு காரணம் என்று நீங்கள் சொல்லவே முடியாது. அது கடைசி விக்கெட்டாக இருந்ததால் அதைப் பிடித்திருந்தால் போட்டி முடிந்திருக்கும் என்பதால் அதுவும் தோல்விக்கான காரணம் தான். ஆனால் பேட்டிங்கில் நீங்கள் எடுத்த 186 ரன்களையும் பார்க்க வேண்டும். சொல்லப்போனால் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள்.

பவுலர்கள் 136/9 என்ற நிலைமைக்கு இந்தியாவின் பக்கம் வெற்றியை கொண்டு வந்து சேர்த்தார்கள். அப்போது, மெஹதி ஹசன் கேட்ச் விட்ட அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அற்புதமாக செயல்பட்டு எதிரணியை அட்டாக் செய்து தைரியமான ஷாட்டுகளை அடித்து வெற்றி அடைய வைத்தார்.

அழுத்தம் இல்லாத போதிலும் அதிகப்படியான தடுப்பாட்டத்தை போட்டு வங்கதேசம் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணம் என்றார்.