பாகிஸ்தானின் ஷகீன் அப்ரிடி பந்துவீச்சை இந்திய அணி அடித்து நொறுக்க வேண்டும்... - கவுதம் கம்பீர் பேட்டி
பாகிஸ்தானின் ஷகீன் அப்ரிடியின் பந்துவீச்சை அடித்து நொறுக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
ஆஸ்திரேலியா பயணம்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. நேற்றோடு பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி நிறைவடைந்தது.
இந்திய அணி அடித்து நொறுக்க வேண்டும்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதும் போது, இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்று இந்திய முன்னாள் கவுதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, ஷகீன் அப்ரிடியின் பந்துவீச்சை அடித்து நொறுக்க வேண்டும். அவரது பந்து வீச்சில் ஆட்டமிழந்து விடக்கூடாது என்ற நோக்குடன் தடுப்பாட்டத்தில் ஈடுபட கூடாது. அணி நல்ல நிலையை எட்ட அவரது பந்து வீச்சில் ரன் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.