தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்!

Rohit Sharma Indian Cricket Team ICC World Cup 2023
By Thahir Nov 12, 2023 09:33 AM GMT
Report

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் அணிந்து குடும்பத்தினருடன் இந்திய அணி வீரர்கள் ஒன்றாக கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினரும் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்! | Indian Cricket Team Celebrating Diwali

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

குடும்பத்துடன் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணி

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது மனைவி ரித்திகாவுடனும், விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடனும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்! | Indian Cricket Team Celebrating Diwali

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் முகமது சமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோரும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

இதேபோல் சுப்மன் கில், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், இஷான் கிஷன், சூர்யகுமார், ஸ்ரேயஸ் ஆகியோரும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்று உள்ளனர்.

தற்போது இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.