டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய சீருடை அறிமுகம்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டி20 கிரிக்கெட் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. One Blue Jersey என்ற பெயரில் இந்த ஜெர்சி பிராண்ட் செய்யப்பட்டு வருகிறது.
புதிய ஜெர்சி
கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஹர்மன்ப்ரீத் கவுர், ஷெஃபாலி வர்மா, ரேணுகா சிங் ஆகியோர் புதிய ஜெர்சியில் மிளிர்கின்றனர். இந்த புதிய ஜெர்சியின் கை பகுதி கருநீல வண்ணத்திலும், உடல் பகுதி வெளிர் நீல வண்ணத்திலும் உள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்திய அணியின் புதிய ஜெர்சி மீது எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த வகையில் மீண்டும் பழையபடி வெளிர் நீல வண்ணத்திற்கு திரும்பியுள்ளது.
மிளிரும் வீரர்கள்
இந்திய அணியின் ஜெர்சி. இனி டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்த புதிய ஜெர்சியை அணிந்து கொண்டுதான் இந்திய அணி விளையாடும் என தெரிகிறது.
ஆஸ்திரேலியா தொடர், தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இந்த புதிய ஜெர்சியை அணிந்து விளையாடும் என தெரிகிறது. ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள் என கூறப்படுகிறது.