கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் - பட்டென்று அதிரடியாக பேசிய டிராவிட்

Indian coach Rahul Dravid conversations Kohli removal
By Nandhini Dec 26, 2021 05:37 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளது. செஞ்சுரியன் நகரில் அமைந்துள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்க இருக்கிறது.

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை என்பதால் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்நிலையில், எப்போதும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்பு, இந்திய கேப்டன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமான ஒரு விஷயம். ஆனால் நாளைய போட்டிக்கு முன்பாக முதல் முறையாக கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது -

தென்னாப்பிரிக்க தொடருக்கு இந்திய அணி சிறப்பான முறையில் தயாராகி உள்ளது. குறிப்பாக வலை பயிற்சி, ஃபில்டிங், பேட்டிங் என அனைத்து வகையில் சிறப்பாக தயாராகியுள்ளோம்.

இந்தத் தொடர் நமக்கு நன்றாக அமையும் என்று நம்புகிறோம். விராட் கோலியை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது, அது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவு.

அந்த முடிவிற்குள் நான் போக விருப்பம் இல்லை. அதேபோல் உள்ளே நடைபெற்ற கூட்டத்தில் பேசியது எதுவுமே வெளியே சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது. அதில் என்னுடைய பங்கு என்னவென்று யாருக்கும் தெரிவிக்க தேவையும் இல்லை.

ஒரு அறைக்குள் நடந்த அறையில் நான் என்ன சொல்லவேண்டுமோ அதை சொல்லிவிட்டேன். அங்கு நான் பேசியதை இப்போது வெளியே சொல்ல சரியான நேரம் இது கிடையாது.

மேலும் இதுபோன்ற விஷயங்களை நான் எப்போதும் வெளியே சொல்வது கிடையாது. இவ்வாறு அவர் பேசினார். தென்னாப்பிரிக்கா தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்வதற்கு முன்பு இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் டி20 கேப்டன் பதவியிலிருந்து தன்னை விலக வேண்டாம் என்று யாரும் என்னிடம் கூறவில்லை என்றார். அவருக்கு முன்பாக பேசியிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ‘விராட் கோலியை தான் பதவி விலக வேண்டாம் என்று கேட்டு கொண்டேன்’/ 

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால், விராட் கோலியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.