உலகின் உயரமான சிகரத்தின் உச்சியை தொட முயன்ற இந்தியர் மரணம் - பொதுமக்கள் சோகம்
உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்காவின் உச்சியை தொட முயன்ற இந்தியர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக உயரமான மூன்றாவது சிகரமாக இமயமலையில் உள்ள கஞ்சன்ஜங்கா உள்ளது. இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள இச்சிகரத்தின் உச்சிக்கு சென்று பல மலையேற்ற வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த 52 வயதான நாராயணன் ஐயர் என்பவர் கஞ்சன்ஜங்கா சிகரத்தின் உச்சிக்கு அருகே ஏறிக்கொண்டிருக்கும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நேபாளத்தில் மலையேற்றத்தின் போது இறந்த மூன்றாவது வீரர் நாராயணன் ஐயர் ஆவார்.
8586 மீட்டர் உயரம் கொண்ட இந்த கஞ்சன்ஜங்கா சிகரத்தில் உச்சியில் 8,200 மீட்டர் உயரத்தில் ஏறிய போது மிகவும் சோர்வாக இருந்ததால் நாராயணன் ஐயர் பயணத்தை தொடர முடியாமல் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.