Monday, Apr 28, 2025

SA-ல் எப்படி ஆட வேண்டும்? அந்த இந்திய வீரரிடம் கற்றுக்கொள்ளுங்கள் - ஆலன் டொனால்ட் அறிவுரை!

Sachin Tendulkar Cricket Indian Cricket Team Sports
By Jiyath a year ago
Report

தென் ஆப்பிரிக்க மண்ணில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என முன்னாள் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

SA-ல் எப்படி ஆட வேண்டும்? அந்த இந்திய வீரரிடம் கற்றுக்கொள்ளுங்கள் - ஆலன் டொனால்ட் அறிவுரை! | Indian Batsman Should Learn From Sachin Tendulkar

இதனையடுத்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மோசமாக ஆடிய இந்திய அணி படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி வீரர்கள் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என முன்னாள் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி முடிவெடுத்த டேவிட் வார்னர்; இத எதிர்பார்க்கவே இல்லையே - வேதனையில் ரசிகர்கள்!

அதிர்ச்சி முடிவெடுத்த டேவிட் வார்னர்; இத எதிர்பார்க்கவே இல்லையே - வேதனையில் ரசிகர்கள்!

கற்றுக்கொள்ளுங்கள்

இது குறித்து அவர் கூறியதாவது "தென் ஆப்பிரிக்காவில் எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஒரே ஒரு இந்திய வீரர் சச்சின் மட்டும்தான்.

SA-ல் எப்படி ஆட வேண்டும்? அந்த இந்திய வீரரிடம் கற்றுக்கொள்ளுங்கள் - ஆலன் டொனால்ட் அறிவுரை! | Indian Batsman Should Learn From Sachin Tendulkar

மிடில்-ஸ்டம்பில் நின்று விளையாடிய அவர் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்களை அவர் நினைத்ததுபோல பந்துவீச வைப்பதில் வல்லவர். ஆடுகளத்தில் முன்னேறி வந்து விளையாடி, பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் போட்டு அவர் நினைத்த இடத்தில் வீசவைப்பார். அதேபோல அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து, மற்ற பந்துகளை அற்புதமாக விட்டுவிடுவார்.

எனவே தற்போதைய இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.