நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளரா- அக்.1 முதல் செக் புக் நிறுத்தம்: அதிர்ச்சி அறிவிப்பு

implement indian bank new announcement october 1
By Anupriyamkumaresan Sep 10, 2021 06:17 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது பழைய காசோலை புத்தகங்களை வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும் எனவும், இல்லையென்றால் அவை அடுத்த மாதம் முதல் செயல்படாது என்றும் அந்த வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வங்கித் துறையில் பலவித மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏப்ரல் மாதம் முதல் சிறிய வங்கிகள் பலவும் பெரிய நிதித்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. அதனால் சிறிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் எந்தவொரு சேவைக்கும் பெரிய வங்கிகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

இதனிடையே வங்கி வாடிக்கையாளர்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் தங்களது ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளரா- அக்.1 முதல் செக் புக் நிறுத்தம்: அதிர்ச்சி அறிவிப்பு | Indian Bank New Announce Implement Form October 1

இந்நிலையில் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் தங்களது காசோலை புத்தகத்தை மாற்ற வேண்டும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இல்லையன்றால் அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு வாடிக்கையாளர்களின் காசோலை புத்தகங்கள் செயலிழந்து விடும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இது தொடர்பான தகவல்களை SMS மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ள இந்தியன் வங்கி நிர்வாகம், இந்த சேவைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

அதன் படி இந்தியன் வங்கி கிளைகள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று வாடிக்கையாளர்கள் புதிய காசோலைக்காக விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பித்தவுடன் ஓரு வாரத்திற்குள் காசோலை புத்தகம் கையில் கிடைக்கும் வகையில் வங்கி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இவ்வகை சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.