2025 இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணீடாதீங்க..!!
2025-ஆம் ஆண்டிற்கு இந்திய இராணுவ ஆட்சேர்ப்பிற்காக அக்னிவீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சேர்ப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர் தங்களது விண்ணப்பங்களை www.joinindianarmy.nic.in என்னும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வுக்கு 17 முதல் 21 வயது வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அக்னிவீரர் பணியிடத்துக்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பொது தகுதித் தேர்வு இணையவழியில் தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். 881488 டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் என்சிசி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்ப பதிவு மார்ச் 12-இல் தொடங்கி ஏப்ரல் 10-இல் முடிவடையும். ஜூன் மாதத்தில் இணையவழியில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணைய வழியிலேயே வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.