எல்லையில் காஃபி ஷாப் திறந்த இந்திய இராணுவம்
அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் Border Brew Cafe கடையை திறந்துள்ளது.

Border Brew Cafe
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில், ஜெமிதாங்க் கிராமத்தின் எல்லையில் Border Brew Cafe எனும் புதிய காஃபி ஷாப் இந்திய ராணுவம் திறந்துள்ளது.
இந்த திட்டமானது, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுலாவை ஊக்குவிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடத்தை ராணுவம் வெறும் 31 நாட்களில் முடித்து சாதனை படைத்துள்ளது. 31 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கஃபே ஆபரேஷன் சத்பாவனா திட்டத்தின் கீழ் அமைக்கப்டும் எனப்படுகின்றது.

மேலும் காஃபே ஆட்மினிஸ்ட்ரேஷனை உள்ளூர் மோன்பா பழங்குடியின பெண்கள் மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் ஆபரேஷன் சத்பாவனா திட்டத்தின் இன்னொரு படியாகும்.
இது எல்லைப் பகுதிகளில் சுற்றுலா வருகையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் இந்த லிடயம் குறித்து கூறியதுள்ளதாவது, “இந்தக் காஃபி ஷாப் ஜெமிதாங் பள்ளத்தாக்கின் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய இடமாக அமையும். இது உள்ளூர் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை உலகிற்கு அறிமுகப்படுத்தும்.”