உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜொலித்த இந்திய பிரபலங்கள்!
உலகப்புகழ் பெற்ற 75-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று வழக்கத்தை விட கோலாகலமாக தொடங்கியது.
இந்த விழாவின் புதுமையாக விளையாட்டு போட்டிகளில் ஒவ்வொரு நாட்டு அணியினரும் தேசிய கொடி பிடித்து அணிவகுத்து வருவது போன்று பல்வேறு நாட்டை சேர்ந்த திரை கலைஞர்கள் தனித்தனியாக ரெட் கார்பெட்டில் அணிவகுத்து வந்தனர்.
அதன்படி இந்திய அணியில் நடிகைகள் தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் உள்ளிட்டோர் அணிவகுத்து வந்தனர்.
இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித், இந்த திரைப்பட விழாவில், முதன்முறையாக கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும், இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் ‘லே மஸ்க்’ படம், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் டிரைலர், மாதவன் இயக்கி உள்ள ‘ராக்கெட்ரி’ படம், பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இவ்விழாவில் வெளியிடப்பட உள்ளது.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
