பிரபஞ்ச அழகியாக 21 ஆண்டுக்கு பின் பட்டத்தை வென்ற இந்திய பெண் யார்ன்னு தெரியுமா?

india-world-the-beauty-of-the-universe
By Nandhini Dec 13, 2021 09:20 AM GMT
Report

21 ஆண்டுக்கு பின்னர் மிஸ் யுனிவர்ஸாக இந்திய பெண் பட்டத்தை வென்றுள்ளது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இஸ்ரோல் எய்லாட் நகரில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021-க்கான போட்டியில் இந்திய அழகியான ஹர்னாஸ் சந்து மிஸ் 21 (Harnaaz Sandhu) யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன், இரண்டு இந்தியர்கள் மட்டுமே இந்த கிரீடத்தை அணிந்துள்ளனர் -

1994 இல் சுஷ்மிதா சென் மற்றும் 2000 இல் லாரா தத்தா. 21 ஆண்டுகளுக்கு பின்னர் இப்பட்டத்தை இந்தியர் ஒருவர் வென்றுள்ளது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த அழகிப்போட்டிக்கு 80 நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்துகொண்டனர். ஆனால், இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

அவருக்கு 2020ம் ஆண்டு மின் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா (Andrea Meza ) மகுடத்தை சூடினார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளான, 21 வயது இளைஞனிடம் இன்று அவர் எதிர்க்கொள்ளும் அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த ஹர்னாஸ், “இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அழுத்தம், தங்களை நம்புவது தான். நீங்கள் தனித்துவமானவர் என்பதை அறிந்துகொள்வதால் அதுதான் உங்களை அழகாக்குகிறது. மேலும், மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துங்கள், உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசலாம்.

இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மன அழுத்ததை விட்டு வெளியே வாருங்கள், உங்களுக்காக நீங்களே பேசுங்கள், ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் தலைவர், நீங்கள் உங்கள் சொந்தக் குரல். நான் என்னை நம்பினேன் அதனால் தான் இன்று இங்கே நிற்கிறேன்” என தெரிவித்து இருக்கிறார்.

அடுத்ததாக மிஸ் பராகுவே நதியா ஃபெரீரா இரண்டாவது இடத்தையும் மிஸ் தென் ஆப்ரிக்கா லலேலா மஸ்வானே மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மேலும், 21 வயதே ஆன ஹர்னாஸ் சந்து சண்டிகார் மாநிலத்தை சேர்ந்தவர்.

இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டில் மிஸ் சண்டிகராக பட்டம் வென்றார். பின்னர், Yaara Diyan Poo Baran, Bai Ji Kuttange போன்ற திரைப்படங்களில் ஹர்னாஸ் சந்து நடித்து இருக்கிறார்.