இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி - எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது

india-world omicron-infection
By Nandhini Dec 05, 2021 03:53 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு வந்த இளைஞர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. கர்நாடாக, குஜராத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஒமைக்ரான் தொற்று பரவி இருக்கிறது.இதனால், ஒமைக்ரான் தொற்று பரவல் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா வைரசான ஒமைக்ரான் பல நாடுகளில் பரவி வருகிறது. இதனையடுத்து, இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா பரவல் இல்லை என மத்திய அரசு கூறி வந்தது. இந்நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

அதனையடுத்து, வெளிநாடுகளுக்குத் தொடங்கப்படவிருந்த விமான சேவையை மத்திய அரசு ஒத்தி வைத்திருக்கிறது. நாடு முழுவதும் விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருவோர் ஒரு வார காலம் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது.

இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. தொடர்பு உறுதியான நபர் 72 வயதானவர் என்றும் ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டிலிருந்து தென்னாப்ரிக்கா வழியாக 2 நாட்களுக்கு முன்பு குஜராத் வந்ததாக அம்மாநில சுகாதாரத் துறையினர் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிராவுக்கு திரும்பிய 33 வயதான இளைஞர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. இதனால், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்திருக்கிறது.