ஒமைக்ரான் தொற்று பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது?

india-world--omicron--finding
By Nandhini Dec 02, 2021 04:22 AM GMT
Report

இந்தியாவில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கவில்லை. இருந்தாலும், ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்பதைப் பற்றி பார்ப்போம் -

ஒமைக்ரான் வைரஸ் முந்தைய வைரஸ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். உடலின் உயிரணுக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தும் கோவிட்டின் கூம்பு புரதத்தில் 30 மாற்றங்களை கண்டுள்ளது. இவ்வைரஸ் தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கவும் வழி வகுக்கலாம். இருந்தாலும், இது பற்றி முழுமையாக தகவல் இன்னும் வெளிவரவில்லை. சில வாரங்கள் பிடிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்.டி., பி.சி.ஆர்., பரிசோதனை மூலம் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருக்கிறதா அல்லது பொதுவான கோவிட் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க முடியும். முழுமையான ஆர்.டி., பி.சி.ஆர்., கோவிட் பரிசோதனை அறிக்கையில் என், எஸ், இ மற்றும் ஓஆர்இ., ஜீன்கள் அடங்கி இருக்கும். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவரின் பரிசோதனையில் எஸ் ஜீன் விடுபட்டிருக்கும். இதனைக் கொண்டு அவருக்கு பொதுவான கோவிட் ஒமைக்ரான் தொற்று உள்ளதா என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

ஒமைக்ரான் அறிகுறிகள் -

  • முந்தைய கோவிட் வைரஸ் வகைகள் ஏற்படுத்திய பெரும்பாலான அறிகுறிகளையே இவையும் காட்டுகிறது.
  • மிகுந்த சோர்வு, காய்ச்சல், உடல் வலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு, தொண்டை எரிச்சல் ஆகியவை இருக்கும்.
  • இந்த வகையில் ஒரு வித்தியாசம் என்னவெனில் சுவை அல்லது வாசனை இழப்பு இருக்காது. ஆக்ஸிஜன் அளவும் குறையாது. மருத்துவமனையில் சேரும் நிலை வராது  என்கின்றனர்.
  • தடுப்பூசி போட்டு, முகக்கவசம் உபயோகித்தால் நிச்சயம் அச்சப்பட தேவை இருக்காது.