Omicron பரவலை தடுக்க விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

New restrictions india-world- omicron-
By Nandhini Dec 01, 2021 05:12 AM GMT
Report

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றில் கொரோனா சற்று குறைந்து வந்தது. இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்னும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளும் வெளிநாடுகளில் உடனான பயணம் மற்றும் பயண கட்டுப்பாடுகளுக்கும் தடை விதித்து வருகிறது.

அதே சமயம் பயணத் தடைகள் விதிப்பதன் மூலம் மட்டுமே ஒமைக்ரான் கொரோனாவை நிறுத்திவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒமிக்ரான் பரவலை தடுக்க விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர், விமான நிலைய இயக்குனருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதன்படி ‘ஒமைக்ரான்’ தொற்று பரவல் எதிரொலியாக 12 நாடுகளிலிருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அவை தற்போது அமலுக்கு வந்திருக்கிறது.

Omicron பரவலை தடுக்க விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல்! | India World Omicron

அவை வருமாறு -

  • தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்கதேசம், மொரிஷியஸ், போஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வரக்கூடிய பயணிகளுக்கு விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
  • விமான நிலைய வளாகத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்படும்.
  • பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலைய வளாகத்திலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
  • கொரோனா இல்லை என்று முடிவு வந்தாலும் அடுத்த 7 நாட்கள் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • அடுத்த ஏழாவது நாளில் மீண்டும் பரிசோதனை செய்து, மேலும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதல் நீடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.