இத்தாலியில் ‘பக்தி பாடல்கள்’ பாடி பிரதமர் மோடியை வரவேற்ற இந்திய வம்சாவளியினர்
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அன்று இத்தாலி தலைநகர் ரோமிற்கு சென்றார். அப்போது, அந்நாட்டின் இந்திய வம்சாவளியினர் ‛ஓம் நமச்சிவாயா' மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை கூறி பிரதமர் மோடியை வரவேற்றார்கள்.
2 நாட்கள் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, வெள்ளிக்கிழமை அன்று இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள பைசா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிறகு, வெளிவந்த பிரதமர் மோடியை அங்கு கூடியிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் வணங்கி வரவேற்றார்கள். அனைவருக்கும் பிரதமர் மோடிக்கு வணக்கம் தெரிவித்தனர்.
பின்பு அங்கிருந்தவர்கள் பலர் ஓம் நமச்சிவாய மந்திரம் மற்றும் பல சமஸ்கிருத மந்திரங்களை ஒலித்து மோடியை வரவேற்றார்கள். குஜராத்தி மொழியிலும் பக்தி பாடல்களை பாடினார்கள். கூட்டத்தில் இருந்த ஒருவர் ‛நரேந்திர பாய், கேம் சோ' (எப்படி இருக்கிறீர்கள்) என்று இத்தாலிய மொழியில் பிரதமர் மோடியிடம் கேட்க, அதற்கு பிரதமர் ‛மஹா மா சோ' (நான் நன்றாக இருக்கிறேன்) என்று இத்தாலியில் பதில் கூறினார்.

