வாடிகனில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி

india-world-meeting-modi-pope
By Nandhini Oct 30, 2021 09:24 AM GMT
Report

‛ஜி 20’ மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடினார்.

இத்தாலி தலைநகர் ரோமில் ‛ஜி20’ அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நேற்று காலை இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி.

இந்நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக, ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி. பிறகு, ரோம் நகரில் உள்ள மஹாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, வாடிகன் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பிறகு, போப் பிரான்சிசை சந்தித்து பேசினார் மோடி.

பிரதமருடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் சென்றார்கள். இச்சந்திப்பில், கோவிட், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொது விஷயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினார்கள்.

போப் பிரான்சிசை சந்தித்த பிறகு, பிரதமர் மோடி டுவிட்டரில் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பு வெகுசிறப்பாக அமைந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தேன் என்று பதிவிட்டுள்ளார்.