அழகிய நீருற்றுக்கு அருகில் குவிந்த உலகத்தலைவர்களுடன் பிரதமர் மோடி - வீடியோ வைரல்

india-world-g20-conference
By Nandhini Nov 01, 2021 05:35 AM GMT
Report

உலகத்தலைவர்கள் அனைவரும் ட்ரெவி நீருற்றுக்கு அருகில் நின்று புகைப்படம் கொடுத்துக் கொண்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இத்தாலி தலைநகரான ரோமில் 16-வது ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா உட்பட 20 நாடுகள் கலந்து கொண்டன. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் போன்ற பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்றார்கள்.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் போன்ற உலக நாடுகளின் தலைவர்கள் ரோம் நகரில் உள்ள ட்ரெவி நீரூற்றுக்கு அருகில் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும், அங்குள்ள பாரம்பரிய வழக்கப்படி, தங்கள் தோள்களுக்கு பின்புறத்திலிருந்து நாணயம் ஒன்றை நீருக்குள் சுண்டிவிட்டனர். இவ்வாறு செய்வதன் மூலம் நாங்கள் மீண்டும் ரோம் நகருக்கு வருகை புரிவோம் என்று சொல்லப்படுகிறது. இது அங்கு பராம்பரிய வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதோ அந்த வீடியோ -