பயங்கரம் - விவசாயிகள் போராடும் இடத்தில் மர்மமான முறையில் இளைஞர் கொடூரக்கொலை - கைகள் வெட்டப்பட்டு தொங்கவிடப்பட்ட கொடூரம்
விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் குண்டலி எல்லையில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் கைகள் வெட்டப்பட்டு கடுமையான காயங்களுடன் சடலமாக தொங்கவிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் 3 புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லி-ஹரியானாவின் சிங்கு எல்லை விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், சிங்கு எல்லையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகள் போராட்ட இடத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டு சடலம் போலீஸ் வைத்து இருந்த பேரிகார்டில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பின்னர், ஒரு கை வெட்டப்பட்டு, உடல் பேரிகார்டில் தொங்கவிடப்பட்டுள்ளது.
இன்று காலை இளைஞனின் சடலம் தொங்குவதை பார்த்த விவசாயிகள் குண்டிலி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். கூர்மையான ஆயுதத்தால் இளைஞனின் உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக உடலை கைப்பற்றி சோனிபட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் கிடையாது என்று விவசாயிகள் அமைப்புகள் மறுத்திருக்கிறது. அதே நேரத்தில் பாஜக இந்தக் கொலையை விவசாயிகள் செய்து உள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து, சோனிபட்டின் டிஎஸ்பி ஹன்ஸ்ராஜ் கூறுகையில், இன்று காலை 5 மணியளவில், குண்டிலி காவல்நிலையத்திற்கு விவசாயிகள் போராட்டம் நடத்தும் அருகில் ஒருவர் கை மற்றும் கால்கள் வெட்டி சடலத்தை பேரிகார்டில் தொங்க விடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த தகவலும் தெரிய வரவில்லை. தெரியாதவர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
