இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 9,216 பேர் கொரோனா தொற்று - 391 பேர் இறப்பு

india-world-coronavirus
By Nandhini Dec 03, 2021 05:30 AM GMT
Report

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,216 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 391 ஆக பதிவாகியுள்ளது.

இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,06,803 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,216 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது நேற்றைய பாதிப்பை விட 500 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,46,06,803 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 391 ஆக பதிவாகி இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 4,70,115 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தொற்றிலிருந்து ஒரே நாளில் 8,612 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,45,666 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,976 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாடு முழுவதும் இதுவரை 1,25,75,05,514 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 73,67,230 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. 

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 9,216 பேர் கொரோனா தொற்று - 391 பேர் இறப்பு | India World Coronavirus