இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா : வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

coronavirus india-world
By Nandhini Dec 01, 2021 04:47 AM GMT
Report

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. நேற்று 38,079 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41,157 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,10,64,908 லிருந்து 3,11,06,065ஆக அதிகரித்திருக்கிறது.

அத்துடன் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 518 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,13,091 லிருந்து 4,13,609 ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 42,004 குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 3,02,69,796 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

அத்துடன் தற்போது வரை 4,22,660 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். நாடு முழுவதிலும் இதுவரை மொத்தம் 40,49,31,715 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. தடுப்பூசி விநியோகத்தை பொறுத்தவரையில் மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 41,99,68,590 டோஸ் தடுப்பூசிகளை வழங்கி இருக்கின்றன.

இதில், 39,42,97,344 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் மாநிலங்களிடம் 2,56,71,246 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கின்றன. கூடுதலாக மாநிலங்களுக்கு 15,75,140 டோஸ்கள் வழங்கப்பட இருக்கின்றன.