‘உருமாறிய கொரோனா வைரஸ்’ - 42 நாடுகளுக்கு பரவல் - மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

india-world-coronavirus
By Nandhini Oct 30, 2021 07:32 AM GMT
Report

உருமாறிய புதிய கொரோனா இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது.

டெல்டா வகை கொரோனா வைரஸ் மாற்றம் கண்டு வேகமாக பரவி வருகின்றன. இதற்கு AY 4.2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது டெல்டா வைரஸைவிட 15 சதவிகிதம் கூடுதலாக பரவக்கூடிய வீரியம் இருக்கும்.

தற்போது இந்த வைரஸ், இந்தியா, பிரிட்டன் உள்பட 42 நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தான் இந்த வைரஸின் பாதிப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரை ஆந்திராவில் 7 பேருக்கும், கேரளாவில் 4 பேருக்கும், தெலுங்கானா, கர்நாடகத்தில் தலா 2 பேருக்கும், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 17 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது. 

‘உருமாறிய கொரோனா வைரஸ்’ - 42 நாடுகளுக்கு பரவல் - மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை | India World Coronavirus