டிசம்பர் 6-ம் தேதி இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் 6-ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியா – ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டிற்காக வரும் டிசம்பர் 6ம் தேதி இந்தியாவிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்தியா – ரஷ்யா ஆண்டு மாநாட்டில், பிரதமர் மோடியும், புதினும் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மூலோபாய கூட்டாண்மை உறவுகளை இன்னும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளனர்.
மேலும், ஜி-20, பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்குள் ஆகியவற்றுக்குள் கூட்டு சேர்ந்து செயல்படுவது குறித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உள்ளனர். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி – அதிபர் புதின் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
